வியாழன், 20 ஜனவரி, 2011

Learn Yoga and Earn from Home. 

யோகா கற்றுக்கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுக் கொள்வது மட்டுமின்றி, பிறருக்கும் கற்றுக் கொடுப்பது மூலம் உங்களுக்கென ஒரு கவுரவமான முழு நேர மற்றும் பகுதி நேர வருமான வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.

திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை நிறுவனம் மூலமாக தமிழக அரசு விளையாட்டுத் துறையின் தமிழ் நாடு உடற்கல்வி மற்றும்  விளையாட்டு பல்கலைக் கழகம் (Tamil Nadu Physical Education & Sports University of Tamil Nadu Government) நடத்தும் பகுதி நேர Certificate Course in Yoga, Diploma in Yoga & PG Diploma in Yoga படிப்புகளை முடித்து சுயமாக உங்களுக்கென ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் எவரும் இந்த வகுப்புகளில் சேரலாம். சர்டிபிகேட் இன் யோகா படிக்க குறைந்த பட்சக் கல்வித் தகுதியான எட்டாம் வகுப்பு போதுமானது. ப்ளஸ் டூ படித்தவர்கள் டிப்ளமா வகுப்பில் சேரலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமாவில் இணையலாம். சனி, ஞாயிறுகளில் நேரடிப் பயிற்சி பெற்று மற்ற நேரங்களில் பாடங்களை வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதி ஆறு மாதங்களுக்குள் உங்கள் படிப்புகளை முடித்து பின்னர் பட்டயங்களை பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக் கழக மான்யக் குழுவினரால் (யு.ஜி.சி) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் இந்த பல்கலைக் கழகம் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு கல்வி ஆணையத்தினரால் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு பல பயனாளிகளை உருவாக்கி உள்ளது. 

இந்தியாவின் மிகச் சிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவரான திரு.Dr.Yogi T.A.கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து நேரடியாக யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

திருமூலர் மற்றும் பதஞ்சலி முனிவரின் பாரம்பரிய யோக முறைகளின் விற்பன்னராக திகழும் இவர் தொடர்ந்து பல புதிய யோகாசனங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். அறுபத்து ஐந்து வயதிலும் இளைஞரைப் போல சுழன்று பணியாற்றும் இவர் இந்த வயதில் அட்வான்ஸ் ஆசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் திறமை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் இயற்கை உணவை மட்டுமே உட்கொள்பவரான இவர் சமைத்த உணவை உண்ணுவதில்லை.  யோகா மற்றும் இயற்கை உணவு முறைகளைப் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

தற்சமயம் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்கு யோகா பயிற்சியாளராகவும், இந்திய அரசின் மொரார்ஜி தேசாய் தேசீய யோகா கல்விக்கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும், தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் யோகா கல்வி ஒருங்கிணைப்பாளராகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைகழம், சென்னைப் பல்கலைக் கழகங்களுக்கு சிறப்பு யோகா மாஸ்டராகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் மற்றும் மனித நேய அறக்கட்டளை போன்றவற்றுக்கான யோகா பயிற்சியாளர் ஆக இருக்கிறார்.இவர் வெளிநாடுகளுக்கு சென்று யோகா கற்பித்து வருகிறார்.

சொந்தமாக நிறுவி நடத்தி வரும் திருமூலர் யோகா, இயற்கை உணவு அறக்கட்டளை மூலமாக நேரடி வகுப்புகளை எடுப்பதுடன், முப்பது முறை மாநில அளவிலான யோக போட்டிகளை நடத்தி பல சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பி.ஜி.டிப்ளமா பெற்றவர்கள் இந்த ஆண்டு எம்.எஸ்சி (யோகா) வகுப்பில் (லேட்ரல் என்ட்ரி) இரண்டாம் ஆண்டு படிப்பில் இணைந்து பலர் இவரிடம் படித்து வருகிறார்கள். எம்.எஸ்சி தேர்ச்சி பெற்ற இவர்கள் அடுத்த ஆண்டு Ph.D வகுப்பில் சேர்ந்து ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட முறையில் இவர் மூலமாக எம்.எஸ்சி படித்து வரும் பலரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் மேற்கண்ட படிப்புகளுக்கான சிறப்பு அட்மிஷனுக்கு மிகக் குறைந்த நேரமே இருப்பதினால் மேற்கண்ட படிப்புகளில் இணைய விரும்புவோர் 25-01-2011-க்குள் யோகா குரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களை 9444837114 என்ற செல்பேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக