வெள்ளி, 27 ஜனவரி, 2012

20. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - இனியனின் அனுபவப் பகிர்வுகள்

இனியனின் முகாம் அனுபவ உரை தொடர்கிறது....


மூன்றாம் நாள் 28-12-2011. 


முதலில் அதிகாலை பள்ளியில் யோகாசனம். பின்னர் அனைவரும் சென்ற இடம் வரதமாநதி அணைக்கட்டு. இதுவரைகாலை யோகப்பயிற்சியின் போது மட்டும் கேட்ட குரல்இன்று இங்கு பதஞ்சலிக்குத் தொடர்ச்சியை அறிமுகம் செய்ய முயன்றது. ஆம், ‘ப் போல் வளை என்ற திரு.ஹரிஹரன்(அஷ்வின்ஜி)அவர்கள்தான் கற்றவற்றில் சிலவற்றை முகன் அமர்ந்து இன்சொல்” வழங்கினார்.


முயற்சிசெய்கைபயிற்சி என்று வரிசைப்படுத்தினார். கடைநிலைக்கு முன்னிலையான தியானம் செய்வது எவ்வளவு கடினமென்றும்அதை இப்பொழுது எல்லோரும் எளிதில் விற்று வருவதை உணர்த்தினார்.

இவ்விடம் கற்றது: ஐம்புலன்களின் அடக்கம் மற்றும் ஐம்புலன்களின் ஒடுக்கம் குறித்து விளக்கியது.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: உள்ளத்தனையது உயர்வாஒடுக்கமா?

பின்னர் யோகாச்சார்யா திரு முருகன் அவர்கள் யோகம் குறித்து தொடர்ந்தார். நம் மனம் அல்லது உணர்வு நிலைகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளதை விவரித்தார். நாம் கேட்பவற்றில் சுமார் 15% மட்டுமே சரியாக அர்த்தம் கொள்ளப்பட்டுமனதில் பதிவதையும் விளக்கினார். மௌனவிரதம் இருக்க எண்ணியிருந்தோம்ஆனாலும் பலருடைய வேண்டுகோளின்படி நாங்கள் தியானம் செய்ய முயற்சித்தோம். திரு.முருகன் அவர்கள் மேற்பார்வையில்சில நிமிடங்கள் தியானம் செய்தோம் (செய்வோம்). இந்த அமைதியான சூழலிலேயே சில மணித்துளிகள் தியானம் செய்வது எவ்வளவு கடினமென்றுணர்ந்தோம். துறவிகள் ஏன் காட்டிற்கும்மலைக்கும் குடி(!)பெயர்ந்தனர் என்பது புரிந்தது. ஒரே நாளில்சாத்தியமாகா இக்கலைக்கு விலக்குசில இறையருள் பெற்றவர்கள் என்பதும் புரிந்தது. ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.

இவ்விடம் கற்றது: எல்லாக் கலைகளில் சிறந்து விளங்கஒவ்வொன்றிற்கும் ஒரு குரு கண்டிப்பாக வேண்டும். இல்லையென்றால் இறையே குருவாக வேண்டும். எதிர் நிரல் நிரை அணி அமைந்த குறள் விலங்கொடு மக்கள் அனையர் ... கற்றாரோ டேனையவர்” அது கூறிய பொருளறிந்த எமக்குநம்பிக்கைக் கிடைத்தது குரு கிடைப்பார்யோகம் சாத்தியம்மக்களில் ஒருவனாகலாம்”.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இயற்கை உணவு மட்டுமே எதிர்பார்த்து வந்த மாணவர்களுக்கு(அதுவும்குறைந்த எண்ணிக்கையுடைய ஒரு குழுவிற்கு)இத்தனை போதனைகள் அவசியம்தானாஇத்தனைப் பெரியவர்களின் அறிமுகம் தேவைதானாஅவர்கள் செலவழித்த பொன்னான நேரங்கள்அவர்களுக்கோ அல்லது மாணவர்க்கோ பயனளிக்கின்றனவாஏனைய மற்ற எல்லா முகாம்பயிற்சிகளும் செய்வதையே செய்கிறோமா?

பின்னர் மீண்டும் குடிலுக்கு வந்தபோது திரு ரமேஷ் அவர்களின் கைவண்ணம் கொண்ட வண்ண வண்ண இயற்கை உணவு வகைகள்விருந்தாய் அமைந்திருந்தது. உண்ட களைப்புக்குப் பின் சிறு ஓய்வு. அதன் பின்னர்திரு.திருச்செந்தில் அடிகளின் மெய்த்தவம்” குறித்த சில விளக்கங்கள். பிரணவ மந்திரத்திற்கும் ஒரு விளக்கம் தந்தார். சிறந்த தமிழ் நூல்கள்ஆங்கில நூல்கள் விவாதிக்கப்பட்டுப் பின் பட்டியலிடப்பட்டன. உலகத்தை இவ்வளவு பெரிதாகப் படைத்ததன் காரணம் ஒன்றும் நகைச்சுவையாய் குறிப்பிட்டார்திரும்பத் திரும்ப படிக்க வேண்டி பாடல்கள் தொகுப்பொன்றும் புத்தகமாய் வெளியிட விழைகின்றார்.

இவ்விடம் கற்றது: குலதெய்வ வழிபாடும்வாரத்திற்கொரு முறை நல்லெண்ணெய்க் குளியலும் தன்னைத் தான் அறிதலும்தன்னிலையில் தான் இருத்தலும் நன்று.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இடும்பைக்கு இடும்பை படுப்பர் ஆகியஅடிகளாரும்யோகாச்சாரியாரும்தேரான்கண் தெளிவும்தெளிந்தான்கண் ஐயுறவும்விரும்பாதுபுல்லுக்கும் பொசியும் வண்ணம் அன்பீந்துஎங்களுக்கு ஆர்வம் ஈந்துநண்பென்னும் நாடாச் சிறப்பும் ஈந்ததுநாங்கள் செய்த நற்பலனாலா அல்லது அவர்கள்உலகமுய்யத் தங்கள் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியினாலாஅவர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பவை என்னென்ன?

ஓய்விற்காய்ப் பின்னர்பள்ளிக்குத் திரும்பினாலும்ஒரு துன்பச் செய்தியால்ஓய்வெடுக்க முடியாத நிலையில் என் குடும்பம் தவித்தபோதுஇரவிலும் தன் நம்பத்தகுந்த மாணவனுடன் (வாடகை வண்டி ஓட்டுனர்) எங்களை சென்னைக்கு வழியனுப்பிப் பின் அக்கறையாய் வினவுதல்கள் பல புரிந்தும்எங்களுக்காக இறை வழிபாடும் நடத்திய இவ்விருவருக்கும்நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். உபதேசித்தவர்களுக்கும்சந்தித்தவுடன்,  “நவில்தொறும் நூல்நயம் போலும்பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு”, என்பதற்கேற்ப நட்பு பாராட்டிய அனைவர்க்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம், “பெரிது பெரிது புவனம் பெரிது” எனத் துவங்கும் பாடல் முடிவது, “தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்றும்இனியதற்குரிய பாடலில் விளக்கியுள்ளதைப் போல், “ஏகாந்தத்தினும்ஆதியைத் தொழுதலினும்அறிவினர் சேர்தலினும்இனிதான அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே” எனக் குறிப்பிட்டுபடித்தோர் நேரத்திற்காகவும்பிழைகளிருந்தால் பொருத்துக் கொள்ளுமாறும் வேண்டி எல்லாரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

முடிவுரை
மேற்கூறிய அறிமுகங்கள்உணர்த்தியவர்களின் பெயர்கள் (திரு.முருகன்திரு.திருச்செந்தில் அடிகள்திரு.சித்தர்திரு.இரத்தினசக்திவேல்திரு.சின்னச்சாமிதிரு.பேச்சிமுத்துதிரு.ஹரிஹரன்) இறைவன் அல்லது சமயக்குரவர் திருநாமங்களில் ஒன்றைப் பெற்றிருந்ததுஆச்சரியத்திற்குரிய ஒற்றுமையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. எனக்குரைத்த பொருள்கோள் எட்டே”, இருப்பினும் தமிழறிஞர்கள் மற்றும் பெண்கள்,  பேசியதிலிருந்து (அல்லது) எழுதியதிலிருந்து வேறு ஒரு முறையிலும் பொருள் கொண்டுகுறை காண்பதில் வல்லவர்கள்அவர்களின் கருத்துக்கள் எனக்குத் தெரிவிக்கப்பட்டால் இக்கட்டுரையில் குறைகளைவேன். என் சந்தேகங்களுக்குஉரையாற்றியவரிடமிருந்து விடை கிடைக்கும் (தொலைபேசியிலோ அல்லது ஒவ்வொரு ஐயத்திற்கும் ஒரு கட்டுரை வடிவிலோ) என்றறிந்தாலும்நேரில் கேட்டறியும் வாய்ப்புக்கு விழைகின்றேன். உலகநாதரின் உலகநீதி படிப்போர்க்கு (ஆம்வேண்டாம் வேண்டாம் என்று முடியும் வரிகள் தான்!) அவர் இறுதியில் உரைத்த பூலோகம் உள்ளளவும் வாழ” ஆசை வரும். முயல்க! முயற்சி திருவினையாக்குக.

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரியாதவன் முட்டாள். -ஒதுங்கியிரு;

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரிந்தவன் மாணவன். - சொல்லிக்கொடு;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரியாதவன் உறங்குகிறான். -எழுப்பிவிடு;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரிந்தவன் அறிவாளி. -பின்செல்.

பழைய அழகான ஆனால் ஆழமான ஆங்கில வாக்கியங்களை மேலும் அருமையாகத் தமிழ்ப்படுத்தப் பலரால் முடியுமெனினும் அதை இக்காலத்திற்கேற்ப கீழ்க்கண்டது போல் நேர்மறையாய் மாற்றலாமா?

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரியாதவன் மாணவன். -சொல்லிக்கொடு;

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரிந்தவன் உண்மையானவன். -பாராட்டிச் சொல்லிக்கொடு

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரியாதவன் சுமைதாங்கி. - உதவிசெய்;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரிந்தவன் ஆசிரியன். -சொல்வதைக் கவனி;

ஐந்து நாள்களில் மூன்று நாள்களில் பெற்ற உடல்நலமனநல மற்றும் அறிவுப் பெருக்கம்இக்கட்டுரை எழுதி முடிக்கும் வரை 100% தொடர இயலாமல் போனாலும்குறைந்தது ஒருவேளைமுடிந்தால் இருவேளை என்று இயற்கை உணவை உண்டுகுறைந்தது இருபது நிமிடங்கள்முடிந்தால் ஒரு மணி நேரம் என்று யோகப் பயிற்சியும் செய்து, “கற்றபின் நிற்க” முயன்று பலன்பெறும்...

– தங்களன்புள்ள கி. நச்சினார்க்கினியன்.


இனியனுக்கு என் பதிலுரை:
இனிய நண்பர் இனியனுக்கு எனது பணிவான நன்றிகள். 


சிந்தனையை, தேடல்களைத் தூண்டி விடும் உங்களது கேள்விகளுக்கு விடைகள் எதையும் நான் இங்கே தரவில்லை. அவற்றை எனக்குக் கற்றுத் தரும் குருவாகக் கொண்டு எனது தேடல்களை துவங்கி விட்டேன். சுயஅனுபவம் கற்றுத் தராத பாடத்தையா எனது பதில்கள் சொல்லித் தந்து விடும்? என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணமும் எனக்கு கற்றுத் தரும் குருவாய் வருகின்றன. தொடர் தேடல்கள் மூலம் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதை மட்டும் இங்கே தங்களுக்கு எனது பதிலாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படி பதில் கூறி தப்பித்தல் முயற்சியில் நான் ஈடுபடுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். Learn; Unlearn; Relearn எனும் மூன்று மந்திரச் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். மற்றுமொரு முகாம் சூழலில் மீண்டும் உங்களைச் சந்திக்க, உங்களிடமிருந்து நீங்கள் இதுவரை கற்றுக் கொண்டவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவிரும்பும் ஒரு மாணவனாய் நான் காத்திருக்கிறேன்.உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். 


அன்பிற்கினிய நச்சினார்க்கினியனுக்கு என் இதயநிறை நன்றி.


(அடுத்து வரும் பதிவுகளில் முகாம் அனுபவங்கள் தொடர்கின்றன)


இனியனின் அனுபவப் பகிர்வுகளைத் தொடர்ந்து வரவிருப்பது எனது அன்பு நண்பர் திரு.கே.நாகராஜன் அவர்களின் அனுபவப் பகிர்வுகள். அவரது ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்து அவர் நம்முடன் பகிரவந்த உணர்வுகளை சிதைக்காமல் அப்படியே ஆங்கில மூலத்திலேயே அடுத்த பதிவில் வெளியிடுவேன். 


(பகிர்வுகள் தொடரும்)

2 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\உள்ளத்தனையது உயர்வா, ஒடுக்கமா?\\

உயர்வு பின்னர் ஒடுக்கம். உயராதது ஒடுங்காது.
ஒடுங்காததின் காரணமும் உயர்வின்மையே :)

இனியனின் பகிர்வுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.,

Ashwin Ji சொன்னது…

உன்னதமான பதிலை தந்து உயர்ந்து விட்டீர் சிவா ஜி,
நீவிர் வாழ்க. நீங்கள் தந்த இந்த பின்னூட்டத்தினை இனியன் படித்து மகிழ்ந்திருப்பார் என எண்ணுகிறேன்.

தங்கள் அன்புக்கும், பண்புக்கும் நன்றி.

கருத்துரையிடுக